டாக்டர் சாம் எவான்ஸ் ஒரு சமகால ஆஸ்திரேலிய தபலா கலைஞர் ஆவார். அவர் மெல்போர்னில் இசைக்கலைஞராகவும், இசையமைப்பாளராகவும், ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். இந்தியாவின் கோல்கொத்தாவில் பண்டிட் அனின்தோ சட்டர்ஜியுடனும், அமெரிக்காவில் உஸ்தாத் ஜாக்கிர் ஹுசைனுடனும் ஒரு தசாப்த கால பயிற்சிக்குப் பின், இப்போது பாரம்பரிய இந்திய இசை மற்றும் சமகால உலக இசை இரண்டிற்கும் வழக்கமான சர்வதேச கலைஞராக உள்ளார்.
தனியாகவும் குழுபப் பக்கவாத்தியராகவும் வட இந்தியாவில் பல முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்; ஆஸ்திரேலியா முழுவதிலும் தொடர்ந்து அமர்வு பதிவு கலைஞராகப் பணியாற்றுகிறார்; பல சமகால இசைக்குழுக்களை வழிநடத்துகிறார். அவருக்கு பல பதிவுகள் உள்ளன; அதில் சில BBC வெளியிட்ட ஆல்பம், ரவி சங்கர், நுஸ்ரத் பதேயாலி கான், நிதின் சாவ்னி ஆகியோரை உள்ளடக்கியது. வியாபடங்கள் மற்றும் ஆவணபடங்களுக்கு இசை இயற்றுவர்; மெல்போர்ன் தபலா பள்ளியின் தோற்றுவியாகவும் இயக்குனர் உள்ளார்; மேலும் தபலாவில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே ஒரு ஆஸ்திரேலியராவார்.
உலக இசை கல்வியியல்களை மற்றும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மொனாஷ் பலகலைக்கழக உலக இசை ஆர்க்கெஸ்ட்ராவையும் அவர் வழிநடத்தியது ஆக்ஸ்போர்ட் ஹாண்டபுக் ஆப் மியூசிக் எட்யுகேஷனில் அவர் வெளியிட்ட கட்டுரையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் முறையான கல்வியில் தபலாவை மேலும் இணைக்கும் வகையில், இடநிலை மற்றும் பல்கலைக்கழக நிலைகளில் மாணவர்கள் தபலா பயில ஒரு பாதையை அவர் உருவாக்கியுள்ளார்.